கனமழையின் அறிகுறியாய் காற்று பலமாய் வீச
இடியோடு மின்னலென பெருமுழக்கம் காதடைக்க
இடைவிடா மழைத் துளிகள் மண்மகளை குளிப்பாட்ட
வீதியெங்கும் வழிந்தோடும் வெள்ளத்தில் தள்ளாடி
சிறு ஈசல் பறந்து விழத் தவளைகள் மகிழ்ந்து பாட
கடைக் குருவி சலசலத்துக் கவலையோடு இடம்பெயர
மிதக்கும் எறும்புகளும் தவிக்கும் பறவைகளும்
தத்தி நடமாடும் தெருநாயின் கூக்குரலும்
அடங்கியே போயின மழைக்கான ஏக்கத்தின்
விவசாயியின் பெருமூச்சில்...!
அளவை கலைக்கரன்

Nice bro
ReplyDeleteThanks bro
DeleteThanks 🙏
ReplyDelete