சிங்கப்பூர் புதுமைகளுக்கு பெயர் போன நகரம். விளம்பர உத்திகளும் வித்தியாசமானதாகவே இருக்கும். அண்மையில் பேரு விரைவு ரயில் நிலையமொன்றில் நான் பார்த்த பதாதைகள் சற்று சிந்திக்க வைத்தன. சமூக நலன்சார்ந்த விளம்பரம் அது. சிங்கப்பூர் சுகாதார நல வாரியத்தின் ஆதரவில் புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம். பல நோய்களுக்குக் காரணமான புகைப் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஓர் செயற்திட்டம். 'I quit ' எனும் தலைப்பில் பலவிதமான நபர்கள் இணையும் திட்டம். இதற்காக 'i phone ' இலும் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறார்கள்.
சமூக அக்கறையுள்ள இத்தகைய விளம்பரங்கள் வரவேற்கப்பட வேண்டியவைகள். தேவை அறிந்து சேவை வழங்கும் இத்தகைய நல மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லா நாடுகளிலும் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்த சிங்கப்பூர் சுகாதார நல வாரியத்தின் சேவைக்கு ஒரு 'சபாஷ்' அதேநேரம் எத்தனை மக்கள் இதைப் பின்பற்றுவார்கள் என்பது எதிர்காலத்தின் மீதுள்ள கேள்வி...
மீண்டும் சந்திப்போம்...
No comments:
Post a Comment