Thursday, July 14, 2011
தாயக வலம் (பகுதி 12 )
அளவெட்டியில் இன்னொரு பிள்ளையார் கோவில்
அதன் பெயர் பெருமாக்கடவை...
ஆலயம் அமைந்த சூழல் அழகு...
முன்புறம் தீர்த்தக்கேணி முழுமையாய் இருக்க
முற்றமாய் வயல்கள் வரிசையாய் நிறைந்திருக்க
தூரத்தில் வழுக்கையாறு
தொடர்ச்சியாய் நெளிந்து ஓட
தென்றலாய் சுகந்தக் காற்று தீண்டியே
சுகங்கள் சொல்ல...
ஆதியாய்த் தொன்றுதொட்டு அமர்ந்திருக்கும் பிள்ளையார்...
தாமரைக் குளமாய் மாறி தரிசனம் காட்டும் கேணி
ஆள் ஒருவரால் கட்டிப்
பிடிக்கமுடியாத தூண்கள்...
ஆலயம் நிமிர்ந்து நிற்க
அழகான முகப்பு வாயில்...
மாருதப் புரவீகவல்லி வரிசையாய் கட்டிய கோவிலில் ஒன்று
இயற்கையின் எழிலில் நின்று தந்திடும் அருளில் என்று
சொல்லிடப் பேர் புகழ் உண்டு
சோர்விலாத் தொண்டர்தம் தொண்டு...
ஆலயச் சுவர்கள் எல்லாம் அழகான ஓவியங்கள்
தீட்டிய கரங்கள் அன்று 'ஆர்ட் மாஸ்டர் பொன்னம்பலம்'...
இன்றும் பார்த்திடக் கதைகள் சொல்லும்
பலப்பல சித்திரங்கள்
வரைந்திடும் போது நானும் அருகினில் நின்ற நாட்கள்
வார்த்தையில் சொல்ல என்றும் இனித்திடும்
கனாக் காலங்கள்...!
பாதை தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment