Wednesday, June 22, 2011

நீதானா அவள்...?

பார்வையிலே பல கோணங்கள் எதிர்நோக்கி
போர்வையிலே என்றும் போர்க்களமாய் நின்று
தீர்வையாக ஆயிரம் கோலங்கள் மனதிலிட்டு
கோர்வையாக அலைமோதும் எண்ணங்கள் எங்கே?

சுதந்திரம் என்மனதில் சுற்றுகிறது பெண்ணே
நிரந்தரம் எப்போதும் நிலைத்துநிற்கும் கண்ணே
தந்திரம் உள்ளவரை மந்திரம் பலிக்காது பெண்ணே
அரங்கம் தரும் நிழலில் அமைதிகள் தூங்காது கண்ணே...!

முடிவே இல்லாது தொடர்கிறது அவலநிலை
விடிவே விடியலுக்காய் விடிகிறது இயல்புநிலை
வடிவே வானவில்லில் வளைகிறது அழகுநிலை
கொடிதே புன்னகையில் கொன்றுவிடும் இன்பநிலை...!

வெள்ளி மழையருவி பொழிந்த வான்நிலவே
அள்ளி அமுதத்தை தெளித்த தேன்மலரே
துள்ளி இதயத்தில் கொலுவிருந்த தாய்மொழியே
கிள்ளி எறியாதே கீதை சொல்ல யார் வருவார்?

முகம் பார்த்து மலர்ந்த புன்னகைப் பூவே
நிலம் பார்த்து வலம்வரும் நித்திய நிலவே
மனம் பார்த்து அமர்ந்த மல்லிகை வாசமே
வனம் பார்க்கவைத்த சகியே ! வாழ்வு என்ன பல்லாங்குழியா?

2 comments:

  1. அகவல் தழுவி வர அழாகான ஒரு காதல் வேண்டுகைக் கவியினைப் படைத்திருக்கிறீங்க. ரசித்தேன்.


    கொடிதே புன்னகையில் கொன்றுவிடும் இன்பநிலை...!//

    புன்னகையில் தானே எல்லோரும் மனசினைத் தொலைத்து விடுகிறோம்....அதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete