உன் செல்லச் சிணுங்கல் கேட்டு
செவியெல்லாம் குளிர்ந்ததெடி
என்னைச் சுற்றிச் சுற்றி நீ வந்தால்
பித்துப் பிடிக்குதெடி
உன் உதடு என் உடம்பில்
பட்டாலே சுர்றேங்குது...
உன் வாயால் நீ செய்யும்
குறும்பு என்னைக் கொல்லுது...
உன் பாடல் கேட்டாலே
சங்கீதம் சலாம் போடும்...
நீ போகும் பாதையெல்லாம்
நிமிடங்கள் நொடியாகும்...
கூட்டத்தோடு நீ வந்தால்
கும்மிருட்டும் பௌர்ணமிதான்...
வீட்டை விட்டு நீ சென்றால்
ஊரே உனக்காக...
இறுதியில் தெரிந்தது
நீ கடித்தால் 'டெங்கு' வருமெண்டு...
என் இனிய நுளம்பே(கொசுவே)...!

ஒரு கவியில் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை முன் வைத்து எழுதியிருக்கிறீங்க.
ReplyDeleteசஸ்பென்ஸ் வைத்து இறுதி வரிகளில் தான் நுழம்பு என்று புனைந்துள்ளீர்கள்.
ரசித்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி... மேலும் உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteThe beginning was awesome yen ezhathukkavi nanbare. Maraiporul kavidhai(hmmmmm) Padithean, rasithean. Nalla kavi nayam. yeppodhu thamizhagam varuveergal? ungalai nearil paarkkavendum- Nuzhambu pola kadippadharku(?). Neengalaga varugireergala? illai, naan ezhathukku varattuma yen nanbare? Dr.Prabhu
ReplyDeleteநன்றி நண்பரே...
ReplyDelete