Saturday, June 18, 2011

தந்தையர்களுக்கொரு கீதம்....!


மண்ணிலே நாம் பிறக்க மகிழ்வோடு அரவணைத்தாய்
கண்ணிலே தூசி பட்டால் கண்ணே எனப் பதைபதைத்தாய்
எண்ணமே எல்லாம் எங்கள் உயர்வுதான் என்றும்
திண்ணமாய் திரண்ட தோள்கள் எம்மைத் தாங்குதற்கே...

முதல் வயதில் நீ தந்த முத்தங்கள் இனித்தது
இரண்டாம் வயதில் விரல் பிடித்து நடந்தது இனித்தது
மூன்றாம் வயது உன்மேல் உப்புமூட்டை ஏறியது
நான்காம் வயதில் நீ சுற்றிக் காட்டிய இடங்கள்
ஐந்தாம் வயது நீ சொன்ன அனுபவக் கதைகள்
பத்து வயதிலே படிப்பு நீ சொன்னாய்
இருபது வயதிலே வாழ்க்கையை நீ சொன்னாய்
முப்பது வரும்போது உணர முடிந்ததது உன்னை...
நானும் ஓர் அப்பாவாக...!

3 comments:

  1. எம் சிறு வயதின் நினைவு மீட்டல் கலந்து தந்தையின் பெருமையினைத் தாங்கி வந்திருக்கிறது உங்கள் கவிதை.

    உங்கள் அப்பாவிற்கு என் உளம் கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete