Friday, June 17, 2011
தாயக வலம் (பகுதி 6 )
பாடும் பறவைகளாய் கூடித் திரிந்த நாட்கள்...
ஆரம்பப் பாடசாலை அது
அனைவரும் ஆசையோடு அழைக்கும்
'அன்னம்மா பாடசாலை'...
ஆண்டு ஒன்று ஆரம்பமானது...
கல்வி முறையோடு கற்பிக்கும் ஆசிரியர்களும்...
தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும்
கரும் பலகைகளும்...
எங்கள் பயணத் திசை மாற்றின...
இதுவரையிருந்த விளையாட்டுப் புத்தி போய்
இனி எங்கள் கனவு வழி
இனிப்பாகத் திறந்தது...
'அறிவு' அனுபவந்தரும் 'கல்வி அறிவு' வழிகாட்டுமென
அப்போது புரிய ஆரம்பித்தது...
அழகியல் கல்வி ஆர்வமூட்ட
ஆலய மணிகள் காதில் கேட்க...
மாலை கட்டுதலும் கோலம் போடுதலும்...
பசை வைத்து பட்டம் ஒட்டுதலும்
வேலை பலவாறு
வீட்டுப் பாடம் ஒரு நூறு...
கணக்கு வாத்தியார் சொன்ன பாடத்தைக்
கவனிக்காத ஒரு பயல்...
கதிரையில் வைத்த குண்டூசி...
என்ன கதை? ....
பாதை தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
ஊர் நினைவுகளுடன் கூடிய ஞாபக மீட்டலாய் உங்களின் பதிவு அமைந்துள்ளது. தொடருங்கள்..
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
ReplyDelete