சிங்கப்பூர் என்றாலே மரங்களும் பசுமையும் நினைவுக்குவரும். முன்பு காடாக இருந்து இன்று நவீன நகரமாக உருவாகியிருந்தாலும் மரங்கள் மீதான கரிசனை இன்றும் இருக்கிறது. அரசாங்கமும் மரங்களை வளர்ப்பதில் அக்கறை காட்டுகிறது. தெருவோரங்களில் அடுக்குமாடித் தொடர் கட்டடங்களுக்கு நடுவே மற்றும் இயற்கைப் பூங்காக்கள் என பலவிதமான இடங்களில் மரங்கள். விரைவுப் போக்குவரத்து வீதிகளின் நடுவிலும் இரு கரைகளிலும் மரங்கள் வரிசையாய் நிற்பது கண்ணுக்கு குளிர்ச்சியான விடயம். மேலும் பச்சை இல்லங்களை உருவாக்குவதில் கட்டட முதலாளிகளுக்குச் சலுகை அளிக்கின்றது அரசு. வியாபார அடுக்குமாடி நிலையங்களிலே 'sky park ' எனப்படும் பூங்காக்களைக் காணமுடியும். பொதுவாகவே மரங்களும் மலர்களும் மனதுக்கு இதமாளிப்பவை. நமது கிராமங்களில் எல்லாம் முதியவர் இளையவர் என வயது வித்தியாசமின்றி ஒரு வேப்பமரத்தடியிலோ ஆலமரத்தடியிலோ இருந்து புதினம் பேசுவார்கள். அது மறக்கமுடியாத நினைவுகளாய் மனதில் ஓடும். சுத்தமான காற்றை உருவாக்குவதில் மரங்களின் பங்கு மகத்தானது.
அன்றொருநாள் சிங்கப்பூரிலே 'புகிட் பட்டோக்' என்னும் இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள 'வெஸ்ட் மால்' என்னும் பல்பொருள் அங்காடியில் ஒரு சிறப்பான கண்காட்சி. அது பசுமை இல்லம் பற்றிய ஒரு விழிப்புணர்வும் தகவல் களஞ்சியமுமாக இருந்தது. சிங்கப்பூர் கட்டட நிர்மாண வாரியம் ஒழுங்கு செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. பலவிதமான கண்காட்சி வடிவமைப்புக்கள் பச்சை இல்ல நிர்மாண மாதிரிகள் என சிறப்பான வடிவமைப்பு. மேலும் பார்வையாளர்களைக் கவர்ந்தது அங்கே நடத்தப்பட்ட போட்டி ஒன்று. சதுரப் பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கூடுதலான பெட்டிகளை அடுக்கியவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. இத்தகைய சமூகம் சார்ந்த சுற்றுப்புறம் சார்ந்த நிகழ்வுகள் நாட்டுக்குத் தேவையானவை.
நான் அவதானித்த இன்னொரு விடயம் சிங்கப்பூரிலே மரங்களை இஷ்டப்படி வெட்டமுடியாது. தேவைப்படின் மரங்களை அப்படியே பிடுங்கி மீள்நடுகை செய்வார்கள். அண்மையில் பெருவிரைவு ரயில் நிர்மாணத்துக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்ட மரங்கள் எனது புகைப்படக் கருவியில் சிக்கின... பெரிய மரங்கள் கூட இங்கே சர்வ சாதாரணமாக மீள்நடுகை செய்யப்படுவது சிங்கப்பூரின் சிறப்பு.
மீண்டும் சந்திப்போம்...
Tuesday, July 19, 2011
Thursday, July 14, 2011
தாயக வலம் (பகுதி 12 )
அளவெட்டியில் இன்னொரு பிள்ளையார் கோவில்
அதன் பெயர் பெருமாக்கடவை...
ஆலயம் அமைந்த சூழல் அழகு...
முன்புறம் தீர்த்தக்கேணி முழுமையாய் இருக்க
முற்றமாய் வயல்கள் வரிசையாய் நிறைந்திருக்க
தூரத்தில் வழுக்கையாறு
தொடர்ச்சியாய் நெளிந்து ஓட
தென்றலாய் சுகந்தக் காற்று தீண்டியே
சுகங்கள் சொல்ல...
ஆதியாய்த் தொன்றுதொட்டு அமர்ந்திருக்கும் பிள்ளையார்...
தாமரைக் குளமாய் மாறி தரிசனம் காட்டும் கேணி
ஆள் ஒருவரால் கட்டிப்
பிடிக்கமுடியாத தூண்கள்...
ஆலயம் நிமிர்ந்து நிற்க
அழகான முகப்பு வாயில்...
மாருதப் புரவீகவல்லி வரிசையாய் கட்டிய கோவிலில் ஒன்று
இயற்கையின் எழிலில் நின்று தந்திடும் அருளில் என்று
சொல்லிடப் பேர் புகழ் உண்டு
சோர்விலாத் தொண்டர்தம் தொண்டு...
ஆலயச் சுவர்கள் எல்லாம் அழகான ஓவியங்கள்
தீட்டிய கரங்கள் அன்று 'ஆர்ட் மாஸ்டர் பொன்னம்பலம்'...
இன்றும் பார்த்திடக் கதைகள் சொல்லும்
பலப்பல சித்திரங்கள்
வரைந்திடும் போது நானும் அருகினில் நின்ற நாட்கள்
வார்த்தையில் சொல்ல என்றும் இனித்திடும்
கனாக் காலங்கள்...!
பாதை தொடரும்...
Monday, July 4, 2011
சிங்கப்பூர் பக்கங்கள்(பகுதி 3)
சிங்கப்பூர் புதுமைகளுக்கு பெயர் போன நகரம். விளம்பர உத்திகளும் வித்தியாசமானதாகவே இருக்கும். அண்மையில் பேரு விரைவு ரயில் நிலையமொன்றில் நான் பார்த்த பதாதைகள் சற்று சிந்திக்க வைத்தன. சமூக நலன்சார்ந்த விளம்பரம் அது. சிங்கப்பூர் சுகாதார நல வாரியத்தின் ஆதரவில் புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம். பல நோய்களுக்குக் காரணமான புகைப் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஓர் செயற்திட்டம். 'I quit ' எனும் தலைப்பில் பலவிதமான நபர்கள் இணையும் திட்டம். இதற்காக 'i phone ' இலும் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறார்கள்.
சமூக அக்கறையுள்ள இத்தகைய விளம்பரங்கள் வரவேற்கப்பட வேண்டியவைகள். தேவை அறிந்து சேவை வழங்கும் இத்தகைய நல மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லா நாடுகளிலும் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்த சிங்கப்பூர் சுகாதார நல வாரியத்தின் சேவைக்கு ஒரு 'சபாஷ்' அதேநேரம் எத்தனை மக்கள் இதைப் பின்பற்றுவார்கள் என்பது எதிர்காலத்தின் மீதுள்ள கேள்வி...

Saturday, July 2, 2011
தாயக வலம் (பகுதி 11 )
மீண்டும் வரதா என எங்கும் காலங்கள்
மறுபடியும் நடக்காதா என நினைக்கும் நிகழ்வுகள்...
தோண்டத் தோண்ட அடிமனதில் வெளிப்படும் தேடல்கள்
சிறுவயதில் கல்லெறிந்து காய் பறித்த புளிய மரம்
பல ஆண்டுகள் கடந்து இன்று காணவில்லை அங்கே...
'புளியடி' இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது...
அந்தப் புளிய மரங்கள் இல்லாது...
தெருவோரத்துக் கிணறு ஒன்று
துலாவும் வாளியுமாக வீதி ஓரத்தில்...
சிறுவயதில் கல்லெறிந்து மகிழ்ந்த நாட்கள்...
கிணற்று முகப்பிலே ஒரு நீர்த் தொட்டி...
(இன்று அது சுவரொட்டி ஓட்டும் இடமாக மாறிவிட்டது)
அன்று எங்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை
மிருகங்களின் தாகம் தணிக்கவென
முன்னோர் கட்டிய தண்ணீர்த் தொட்டி...
வாய் பேசா உயிர்களின் தாகம் தீர்த்த தமிழனுக்கு
முள்ளிவாய்க்காலில் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்கவில்லை...
இறைவா...
அயலூர்தான் கந்தரோடை...
அழகான தமிழ்ப் பெயர் அது...
வழுக்கை ஆற்றின் கரயோர நகரமது
பண்டைக் காலங்களில் சோழர்கள் கப்பலிலே
வந்துபோன இடமிது...
சேது நாணயங்கள் செப்புத் தகடுகள்
பவளம் ரத்தினங்கள் அதற்கு அத்தாட்சிகள்...
ஆனால் இன்று
அதன் பெயர் 'கதுறு கொட' என்கிறது அரசு
தொல்பொருள் இடத்திலே தோண்டிய கற்களால்
'விகாரை' வடிவமைத்து வரலாறு தலைகீழ் ஆகின்றது...
ஏன் அவை இந்துக் கோவிலின் 'விமானமாக' இருக்காதா?
அரச மரமொன்று புதிதாக நட்டுவிட்டு
அங்கே 'போதி மாதவனின்' சிலையொன்றை வைத்துவிட்டு...!
எல்லாத்தையும் பார்க்க தலை சுற்றுகிறதே
எங்கு போய் சொல்ல இதை...!

Friday, July 1, 2011
சிங்கப்பூர் பக்கங்கள்(பகுதி 2)
மலேசிய ரயிலின் கடைசி நாள் பயணம்...
சிங்கப்பூரிலே அமைந்துள்ளது தஞ்சோங் பாகார் ரயில் நிலையம். மிகவும் சரித்திரப் பின்னணியுடன் கூடிய மிடுக்கான தோற்றம். அழகியல் சொல்லும் கட்டட வடிவமைப்பு என 80 வருட பாரம்பரியமிக்க ரயில் நிலையம்.
30 - 06 - 2011 வரையிலும் ரயில் நிலையமும் தண்டவாளப் பாதைக்குரிய நிலப்பகுதியும் மலேசியாவுக்குச் சொந்தமாக இருந்தது. இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் மலேசிய மண்ணுடனான ஓர் உறவுப்பாலமாக இருந்த இந்த நிலையம் இல்லாமல் போவது அனைவரது நெஞ்சங்களையும் நெருடுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டில் ரயில் நிலையம் வந்தபோதும் ரயில் சேவை சுமூகமாகத் தொடர்ந்தது என வரலாறு கூறுகிறது. இந்த ரயில் நிலையத்தின் சரித்திரம் பற்றியும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் பலர் தமது மலரும் நினைவுகளாக மனதில் இரைமீட்டிக்கொள்கின்றனர். நெளிந்து வளைந்து காடுகள் கடந்து சென்ற ரயில் பாதையும் உரத்த குரலெடுத்து சத்தமிடும் ரயிலும் இசையும் இனி சிங்கப்பூரர்களின் கனவில் மட்டுமே வந்து போகும்.
இறுதி ரயிலின் பயணத்தின்போது ரயில்வே ஊழியர்கள் விடைபெற்று சென்றபோது பலர் கண்களில் கண்ணீர் பனித்தது.
மீண்டும் சந்திப்போம்...
Thanks to Straits times for images.

Wednesday, June 29, 2011
சிங்கப்பூர் பக்கங்கள் (பகுதி 1)
சிங்கத்தின் ஊர் என்ற பொருளைக் கொண்டதும் 'சிங்கப்பூரா' என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும்(சிங்கா- சிங்கம் ,பூரா- ஊர்) கருதப்படும் சிங்கப்பூர் இன்று ஓர் சிறந்த நாடாக மிளிர்கிறது. சுமாத்திரா மலாய் இளவரசர் 'சாங் நிலா உத்தமா' 14 ம் நூற்றாண்டளவில் கடும் புயலுக்கு ஒதுங்கிய தீவு இதுவென்றும் அங்கே அவர் கண்ட மிருகத்தைச் சிங்கமென எண்ணி 'சிங்கப்பூரா' என்று அழைத்ததாகவும் கதைகள் உண்டு. இந்த இடம் முன்பு கடாரம் கொண்ட சோழபுரத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது என்றும் வரலாறு கூறுகிறது.
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், 'சார் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்' இத்தீவில் கால்பதிக்க அன்று ஆரம்பமானது பிரித்தானியர்களின் தலையீடு. அவர்களின் தலையீடு 1965 ல் சிங்கப்பூர் சுதந்திரமடையும் வரையிலும் இருந்தது. இது பல்லின மக்களும் வாழும் ஓர் தீவாக இன்றுவரை இருந்து வருகின்றது. திரு லீ குவான் யூ அவர்களின் வழிகாட்டலில் விரைவான வளர்ச்சிகண்டு இன்று பொருளாதாரத்திலும் சுற்றலாத் துறையிலும் முன்னிற்கிறது. இயற்கையான வளங்கள் ஏதுமின்றி மூளையை மூலதனமாக்கி உயர்ந்துள்ள நாடு எனும் பெருமை சிங்கபூரிற்கே உரியது. ஆசியாவின் வர்த்தக முக்கியத்துவம் உள்ள ஓர் கேந்திரமாக இது உருவாகி இருக்கிறது.
வானுயர்ந்த கட்டடங்களும் நெடும் சாலைகளும் எங்கு நோக்கினும் பசுமை மரங்களும் அழகு சேர்க்கும் சிங்கார நகரம். இரவில் மின்னும் விளக்குகளின் வெளிச்சத்தில் ஓர் தனி அழகு மிளிரும். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் எந்த நேரத்திலும் பயமின்றிய நடமாட்டம். ஓர் சொர்க்கபுரியாக அனைவரையும் சுண்டி இழுக்கும் நகரம். வெளிநாட்டவர்க்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவரவேண்டும் என எண்ணவைக்கும் உல்லாசபுரி. கேளிக்கைகளும் உற்சாகமும் நிறைந்த இந்த ஊர் பற்றி தொடர்ந்து பல சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.

Monday, June 27, 2011
தாயக வலம் (பகுதி 10 )
கோவில் இல்லா ஊர்களிலே குடியிருக்க
பேயும் அஞ்சும்....
ஆலயம் இல்லா இடத்தில்
ஆளரவம் இருக்காது...!
நான்கு பக்கமும் மதில்கள் சூழ
ராஜகோபுரம் நிமிர்ந்து நிற்க...
ஒருபக்கம் தேர்முட்டி
மறுபக்கம் அன்னதான மண்டபம்...
கும்பழாவளையின் சிறப்புக்கள் ஆயிரம்...
தொண்டர்சபை நடத்தும் 'பண்ணிசை வகுப்பு'
நெஞ்சில் நிழலாடும்...
அளவெட்டியில் சங்கீதமென்றால்
அவர் பெயர்தான் முதலில் வரும்...
'வி.கே நடராசா' ஊரே அறிந்த பெயர்...
அவர் நடத்தும் பண்ணிசையில் தேவாரம்
தேனாய் ஒலிக்கும்...
திருவாசகம் கேட்டால் திகட்டாத மருந்தாகும்...
முன்னைய ஆலயத்தின் உட்சுவரில்
ஓவியங்கள்...
பளிங்குக்கல்லில் பக்குவமாய் வரைந்த
காவியங்கள்...
அழகுக் கோலமிட்ட கரங்கள் அவருடையது
'ஆர்ட் மாஸ்டர் பொன்னம்பலம்'
ஆலயத் திருப்பணியில் அலாதியான இன்பம்...
அளவெட்டிக் கோவில்களில் அவர் கைவண்ணம் மின்னும்...
இன்றைய பொழுதுகளில் ஆலயச் சுவர்களில்
அந்த ஓவியங்கள் இல்லை...
எங்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன...
எங்கள் ஆலய மணியின் நாதம்
அற்புதமான ஒன்று...
அளவெட்டி முழுவதுமே அழகாகக் கேட்கும் இசை...
போர்க் காலங்களிலும்
நித்திய பூசைகள் இடைவிடாது நிகழ்ந்தது
கும்பழாவளையில் பெருமை...
கடல் கடந்து போனாலும் அவர் அருள்
நடை தளர்ந்து போனாலும் அவர் துணை...!

Saturday, June 25, 2011
தாயக வலம் (பகுதி 9 )
அளவெட்டி என்றாலே கோவில்கள் அழகு
ஆங்கங்கே பல கோவில்கள் உண்டு...
பிள்ளையார் கோவில் என்றால்
சின்னப் பிள்ளைகூடச் சொல்லும் பெயர்
'கும்பழாவளைப் பிள்ளையார் கோவில்...'
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே அமையப்பெற்று
மூன்று தேர்கள் பவனிவர
ஊரின் நடுவிலே அருள் கொடுக்கும் விநாயகர்...
சரித்திரப் பெருமை பல சாற்றிடும் கோவிலாக
மிடுக்கோடு மிளிரும் கோபுரம்...!
குதிரை முகம் மறையவென கும்பிட்ட பெண்
'மாரதப் புரவீக வல்லி'
கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று...
யாழ் மண்ணிலே ஏழு விநாயகர் கோவில்களில்
அளவெட்டி கொண்டது மூன்று கோவில்கள்...
குடியிருக்கும் மக்கள் குறை தீர்க்கவென வீற்றிருக்கும்
செழுமைமிகு மூர்த்தி அவர்...
பலர் கனவில் வழிகாட்டி
பலர் மனதை உரமாக்கி
உண்மைப் பொருளுரைக்கும் சித்தி விநாயகர்...
திருவிழா என்றாலே ஊரே களை கட்டும்...
மாவிலை தோரணமாய் தெருவெங்கும் வண்ணமயம்...
காலையில் மணியோசை கதிரவன் வரவு சொல்ல
ஆனந்தப் பொழுதின் ஆரம்பம்...
கொடியேறி விட்டாலே குடும்பங்களில் குதூகலம்...
எழாம் திருவிழாவில் 'வாணவேடிக்கை' சிறப்பு...
மிட்டாய்க் கடைகளும் கச்சான் கடைகளும்
வீதியெங்கும் நிறைக்க
பக்தர் குறை தீர்க்கப் பவனிவரும் பிள்ளையார்...
சப்பரமும், வாகனமும் சகடையில் அலங்கரிப்பும்
நித்தமொரு பொலிவோடு நிமிர்ந்துவரும் பிள்ளையார்...
ஊர்கூடித் தேரிழுக்க ஒய்யார வீதிஉலா
மூன்று மூர்த்திகளும் சேர்ந்துவரும் இன்பவிழா...
தீர்த்தக் கரையோரம் விநாயகர் வீற்றிருக்க
தீர்த்தத் திருவிழாவில் பொங்கிடும் பக்த வெள்ளம்...!
'சின்ன' மேளங்களும், காவடி ஆட்டங்களும் சிறப்பான
சமயச் சொற்பொழிவுகளும்,
'வாரியார்' கால் பட்ட வரலாறு இங்குண்டு ...
அன்னதானம் என்றாலே ஊரே உதவி செய்யும்
அவரவர் பங்குகளை அன்போடு உபசரிக்கும்...
அளவையூர் பெருமைகளுக்கு
அளவே இல்லை சொல்லச் சொல்ல...

Subscribe to:
Posts (Atom)