
கனவுகளின் நினைவுகளில் என்றுமே வாழ்ந்து
உறவுகளை இழந்து உயிர்களைப் பிரிந்து - எம்
இரத்தந் தோய்ந்த தாய்மண்ணே....!
இனி எப்போ தருவாய் அமைதி ..?
உத்தரவாதமில்லா வாழ்க்கை - பயந்து
ஓடி ஒளியும் பயணங்கள்
உயிர்வலியும் தொடர் சாவும்
உறக்கமில்லா இரவுகளும் வேண்டாம் இனி ..!
கற்பனையில் கண்டவைகள் பலிக்கட்டும்
தடையில்லாமல்
நிச்சயமான ஓர் விடிவு
நிகழட்டும் குறைவில்லாமல் ..!